ரஷ்யாவில் ரகசிய சிறை... உக்ரைன் போர்க் கைதிகள் மரணத்திற்காக பிரார்த்தனை செய்யும் இடம்
உக்ரைனின் போர்க் கைதிகளை சித்திரவதை செய்வதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்துள்ள நிலையில், இரண்டு முன்னாள் கைதிகள் உண்மையில் என்ன நடக்கிறது என்பதன் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.
உலகின் கொடூரமான தடுப்பு மையம்
உக்ரேனிய குடிமக்களை தங்க வைக்க பயன்படுத்தப்படும் ரஷ்ய சித்திரவதை சிறைக்குள் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் பல ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் சிறைபிடிக்கப்பட்டு உலகின் மிகவும் கொடூரமான தடுப்பு மையங்களில் ஒன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சிம்ஃபெரோபோல் தடுப்பு மையம் உக்ரேனிய மக்களில் பலருக்கு திகிலூட்டும் இல்லமாக மாறியுள்ளது. அவர்களில் ஒருவரான அலெக்சாண்டர் தாராசோவ், மே 2022 வரையில் குறித்த தடுப்பு மையத்தில் கைதியாக இருந்தவர் தற்போது அங்குள்ள கொடூர நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சனில் வசிக்கும் போது ரஷ்யாவிற்கு எதிராக பேரணிகளை ஏற்பாடு செய்ததற்காக மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். தண்டனை மற்றும் சித்திரவதையின் ஒரு வடிவமாக மின்சார அதிர்வுகளை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் விவரித்துள்ளார்.
@getty
மரணத்திற்காக பிரார்த்தனை செய்யும் இடம்
மேலும், கைதிகள் தப்பிச் செல்ல முயன்றால், கொடூரமான நாய்களுக்கு இலக்காவது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு அடிபணிய மறுக்கும் ஒவ்வொரு நொடியும், நரகத்தைவிட மோசமானதாக தண்டனை இருக்கும் என தெரிவித்துள்ளார் தாராசோவ்.
சிறைக்குச் செல்வதற்கு முன்பு கெர்சனில் ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்ட கட்டிடத்தின் அடித்தளத்தில் சித்திரவதைக்கு இலக்கானதாக அவர் தெரிவித்துள்ளார். மற்ற போராட்ட ஏற்பாட்டாளர்களின் பெயர்களை அறியக் கோரி அவரது காதில் மின்கம்பங்களை வைத்து அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
@AP
மேலும், அந்த தடுப்பு மையமானது போர்க் கைதிகள் மரணத்திற்காக பிரார்த்தனை செய்யும் இடம் எனவும் தாராசோவ் அம்பலப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், ரஷ்யா தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளை மறுத்தே வருகிறது. போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதையும் ரஷ்யா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.