உக்ரைனின் கீவ் மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்! வெளியான தகவல்
ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் கீவ் நகரில் ஐந்து கட்டிடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற மக்கள்தொகை மையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில் ரஷ்யா கீவ் நகரில் ட்ரோன்கள் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நகர நிர்வாக தலைவர் Serhii Popko இதுகுறித்து கூறுகையில், ட்ரோன்களின் துண்டுகள் ஒரு நிர்வாக கட்டிடத்தை சேதப்படுத்தியது மற்றும் நான்கு குடியிருப்பு கட்டிடங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன என தெரிவித்துள்ளார்.
@Gleb Garanich/Reuters
உயிர்சேதம் இல்லை
இந்த தாக்குதல் விடியற்காலையில் வணிக நாள் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்டதாகவும், இதில் உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வாரங்களில் உக்ரைன் நாடானது ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. எனினும், தனது வான் பாதுகாப்பு அமைப்புகளால் பெரும்பாலும் அவற்றை உக்ரைன் தடுத்து வருகிறது.
@Reuters