பதுங்கு குழிப் போர்: உக்ரைன் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ காட்சிகள்
பக்முட் பகுதியில் ரஷ்ய படைகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே நடந்த அகழிப் போர் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி கிட்டத்தட்ட 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
The 3rd Assault Brigade continues to provide the world with some of the most high-quality videos from the trench warfare near Bakhmut.
— Visegrád 24 (@visegrad24) June 26, 2023
Here, we can see them liquidate several Russian soldiers from the 57th Mechanized Brigade and capturing many more.
?? pic.twitter.com/8Y4vwRBIK6
இதுவரை தடுப்பு தாக்குதல் நடத்தி வந்த உக்ரைன், தற்போது மேற்கத்திய ஆயுதங்களின் அதிகமான கையிருப்பை தொடர்ந்து முதல் முறையாக பதிலடி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த பதிலடி தாக்குதலில் இதுவரை 8 நகரங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.
பதுங்கு குழி போர் தாக்குதல்
இந்நிலையில் உக்ரைனின் பக்முட் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சண்டை தொடர்பான காட்சிகளை உக்ரைனின் 3வது தாக்குதல் படை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் ரஷ்யாவின் 57 வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட காட்சிகள் மற்றும் சரணடையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |