உக்ரைனை பாடாய்படுத்தும் ரஷ்யா! 6 வயது சிறுமி உட்பட 7 பேர் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு
உக்ரைனிய நகரான செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏவுகணை தாக்குதல்
வடக்கு உக்ரைனிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்று நகரமான செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய நகர மேயர் ஒலெக்சாண்டர் லோமகோ, ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 லிருந்து 117 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Chernihiv. The historical heart of the old city. A beautiful summer Saturday. They targeted a theatre, just as in Mariupol. This time, it wasn't a bomb, but a russian missile. Civilians, including children, have been injured and killed. Another "important military target" was… pic.twitter.com/oDuH4AawDb
— Defense of Ukraine (@DefenceU) August 19, 2023
மத விடுமுறையை கொண்டாடுவதற்காக தேவாலயத்திற்கு மக்கள் சென்று கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் அரங்கேறி இருப்பதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் 12 பேர் குழந்தைகள் என்றும், 10 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஜெலென்ஸ்கி கண்டனம்
This is what it means to live next to a terrorist state. This is what we are uniting the entire world against.
— Володимир Зеленський (@ZelenskyyUa) August 19, 2023
Today, a Russian missile hit the heart of Chernihiv. A square, a university, and a theater. Russia turned an ordinary Saturday into a day of pain and loss. There are… pic.twitter.com/AMgXCVfR7h
ஸ்வீடனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இருந்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து டெலிகிராமில் பதிவிட்டுள்ள கருத்தில், சதுக்கம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தியேட்டர்கள் அடங்கிய எங்கள் செர்னிஹிவ் நகரத்தின் மையத்தில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.
சாதாரண சனிக்கிழமை தினத்தை ரஷ்யா வலியும் இழப்பும் மிகுந்த நாளாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |