தொடங்கியது உள்நாட்டுப் போர்? ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி நகரும் வாக்னர் படை
ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் படையை கண்டதும் சுட ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவுடன் சேர்ந்து 'வாக்னர்' என்ற மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது அந்த அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.
இதற்கிடையில், இன்று ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள் Voronezh பகுதியில் உள்ள Wagner குழுவின் எரிபொருள் கிடங்குகளை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
மாஸ்கோவை நோக்கி நகரும் வாக்னர் படை
இதனால் கோபமடைந்த வாக்னர் அமைப்பு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. தங்கள் பாதையில் குறுக்கிட வேண்டாம் என்று ரஷ்ய ராணுவத்திற்கு வாக்னர் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, வாக்னர் பிஎம்சி குழுவிற்கும் ரஷ்ய இராணுவம் மற்றும் தேசிய காவலர் படைகளுக்கும் இடையே இப்போது வோரோனேஜ் பகுதியில் கடும் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
3 ஹெலிகாப்டர்கள், ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக வாக்னர் படை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவிக்கையில், இப்போதுதான் ரஷ்யாவின் பலவீனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
The Wagner Group just shot down an An-26 transport plane of the Russian Air Force over the Voronezh region
— Visegrád 24 (@visegrad24) June 24, 2023
They have also shot down 3 Russian military helicopters since launching the military coup last night pic.twitter.com/S3KeXA8UbR
The Wagner Group just shot down an An-26 transport plane of the Russian Air Force over the Voronezh region
— Visegrád 24 (@visegrad24) June 24, 2023
They have also shot down 3 Russian military helicopters since launching the military coup last night pic.twitter.com/S3KeXA8UbR
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |