உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு உதவியுள்ள ஈரான்: ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைன் தலைநகர் கீவ்வை தாக்கியது ஈரானிய ஆளில்லா விமானம்.
ஈரான் ரஷ்யாவிற்கு உதவி இருப்பதற்கான ஆதாரம் உள்ளது என அமெரிக்கா குற்றச்சாட்டு.
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக ஈரான் தனது படைகளை அனுப்பி உதவியதற்கு ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் இருந்து ரஷ்ய படைகள் தற்போது பின்வாங்க தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக ரஷ்ய படைகள் சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் கொண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
AFP - Getty Images
இந்த தாக்குதல் உக்ரைனில் பலத்த சேதங்களை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது ஈரானின் ஷாஹெட் 136 ட்ரோன்கள் என உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
ஆனால் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கிய இருப்பதாக வெளிவந்த குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய பகுதிகளுக்கு ஈரான் தனது படைகளை அனுப்பி உதவி இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ள தகவலில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு மிக பெரிய அழிவு தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது, இதற்காக ஈரான் சிறந்த பயிற்சியாளர்களையும், தொழில்நுட்ப ஆதரவையும் ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
AFP - Getty Images
ஆரம்பத்தில் ஈரானில் இருந்து அனுப்பப்பட்ட தொழில்நுட்பங்கள் தோல்வியை சந்தித்து வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் தரத்திற்கு செயல்படவில்லை. இதன் விளைவாக ஈரானியர்கள் ரஷ்யர்களுக்கு உதவ துருப்புக்களை அனுப்ப முடிவு செய்தனர் என்று ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரதமர் வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனை: திங்கட்கிழமை நிறைவடையும் வேட்புமனு தாக்கல்
ஆனால் இந்த துருப்புகளின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை என்றாலும், ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட படைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சிறியது என தெரிவித்துள்ளார்.