மூன்று நாடுகளுக்கு ஆபத்து…பால்கனை கட்டுப்படுத்த விரும்பும் ரஷ்யா :நேட்டோ உதவுவதாக உறுதி
ரஷ்யா மேற்கு பால்கனை கட்டுப்படுத்த விரும்புவதால் போஸ்னியா, ஜார்ஜியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் ஆபத்தில் இருப்பதாக நேட்டோ எச்சரித்துள்ளது.
ஆபத்தில் ரஷ்யாவின் அண்டை நாடுகள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் வரும் நாட்களில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடுகள் ஆபத்தில் இருப்பதாக நேட்டோ எச்சரித்துள்ளது.
நேட்டோ வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான இரண்டாவது நாள் பேச்சுவார்த்தையில் கூட்டத்தில் பேசிய எஸ்டோனியாவின் பிரதிநிதி உர்மாஸ் ரெய்ன்சாலு, செய்தி தெளிவாக உள்ளது, மேற்கு பால்கன் பகுதிகளை கட்டுப்படுத்த ரஷ்யா விரும்புகிறது என்பதை நேட்டோ உறுப்பு நாடுகள் அனைவரும் நன்கு அறிந்திருக்கின்றன.
Balkan peninsula-பால்கன் தீபகற்பம்
மேலும் நமக்கு தேவை என்பது நடைமுறை மற்றும் ஆதரவு, இந்த நாடுகள் உயிர் வாழ உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ரெய்ன்சாலு, இன்றைய உரையின் மையம் போஸ்னியா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளான மால்டோவா மற்றும் ஜார்ஜியா ஆகியவை, இவை இரண்டும் ரஷ்ய துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரிந்த பகுதிகளைக் கொண்டுள்ளது.
போரில் என்ன முடிவு எட்டப்படுகிறது என்பதே மால்டோவா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளின் ஈர்ப்பு விசையின் மையப்புள்ளி என்று தெரிவித்துள்ளார்.
Nato- நேட்டோ(Reuters)
நேட்டோ உதவுவதாக உறுதி
உக்ரைன் உடனான ரஷ்ய போரில் நேட்டோ தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வருகிறது, அத்துடன் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளையும் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைத்து பாதுகாப்பை பலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை சுதந்திர நாடுகளை பாதுகாக்க மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பு உதவும் என்றும் நேட்டோ உறுதியளித்துள்ளது.