கருங்கடல் உணவு தானிய ஏற்றுமதி…ஏழை நாடுகளுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்: ரஷ்யா கருத்து
கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தானிய ஏற்றுமதி, உலகின் ஏழ்மை நாடுகளை சென்றடைகிறதா என்று உறுதி செய்ய விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, பல ஆப்பிரிக்க மற்றும் ஏழ்மையான ஆசிய நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சமீபத்தில் உக்ரைன், ரஷ்யா துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இடையே புதுபிக்கப்பட்ட கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைனில் இருந்து ஆப்பிரிக்காவின் மிகவும் ஏழையான நாடுகளுக்கு 60 கப்பல்களில் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
Grains-உணவு தானியம்(GETTY)
இது குறித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட குறிப்பில், உக்ரைனில் இருந்து வெளியேறும் 60 தானிய கப்பல்கள் சூடான், ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் உள்ள அப்பாவி மக்களின் பசியை போக்கும் என தெரிவித்தார்.
ஆனால், அதற்கு சர்வதேச சமூகம் போதிய ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த திட்டம் அமுலுக்கு வரும் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டு இருந்தார்.
EXPORT SHIP-சரக்கு கப்பல்(REUTERS)
ரஷ்யா விருப்பம்
இந்நிலையில் ரஷ்யா கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொண்டு, மிகவும் ஏழ்மையான ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அதிகப்படியான உணவு தானியங்கள் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை திங்கட்கிழமை ரஷ்யாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி வெர்ஷினின் (Sergei Vershinin) கூறியதை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
Grains-உணவு தானியம்(EPA)