உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை வழங்க முடிவு: பிரித்தானியாவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா
நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க பிரித்தானியா முன் வந்ததற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியா
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 15 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், பக்முட் நகரை நோக்கி உக்ரைனிய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரித்தானிய பாதுகாப்பு துறை செயலாளர் பென் வாலஸ்(Ben Wallace) சமீபத்தில், உக்ரைனுக்கான ஏவுகணைகளை பிரித்தானிய விரைவில் ஒப்படைக்கும் என தெரிவித்து இருந்தார்.
Getty
இதன் மூலம், உக்ரைனிய ஆயுதப் படை ரஷ்யாவின் தொடர் வன்முறைகளில் இருந்து தங்களை சிறப்பான முறையில் தற்காத்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ரஷ்யா கடும் எதிர்ப்பு
இந்நிலையில் ஸ்ட்ரோம் ஷடோ நீண்ட தூர ஏவுகணைகளை(Storm Shadow long-range missiles) உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்க எடுத்து இருக்கும் முடிவு போர் நிலைமை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
Had a phone call with UK Prime Minister @RishiSunak. Thanked for the significant enhancement of our capabilities with long-range Storm Shadow missiles and other irreplaceable military assistance. We discussed further defense cooperation and coordinated our positions on the eve of…
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 12, 2023
அத்துடன் இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ரஷ்யாவிற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக தேவையான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் எடுக்க மாஸ்கோவுக்கு உரிமை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு ராணுவ நடவடிக்கை நடைபெறும் பகுதியில் நிலைமை தீவிரப்படுத்தும் விதமாக உக்ரைனின் ஆயுத எண்ணிக்கையை உயர்த்தும் பிரித்தானியாவின் மற்றொரு முற்றிலும் எதிரான நடவடிக்கையால் வருத்தமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Ukraine is extremely grateful for the long-range Storm Shadow missiles we've been give by the United Kingdom to defend our territory and people. Here's why they're pretty impressive 👇 pic.twitter.com/dTFx1Bb0w4
— UNITED24.media (@United24media) May 12, 2023
அத்துடன் 250 கி.மீ வரை சென்று தாக்க கூடிய உயர் துல்லிய ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது என்பது, உக்ரைனுடனான மோதலில் பிரித்தானியாவின் முன்னோடி இல்லாத ஈடுபாட்டை காட்டுகிறது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.