பக்முட் நோக்கி முன்னேறும் உக்ரைனிய படைகள்: இழப்புகளை மறைக்க போலி தகவல்களை பரப்பும் ரஷ்யா
ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் பக்முட் நகர் நோக்கி உக்ரைனிய ராணுவ படைகள் 2 கிலோ மீட்டர் வரை முன்னேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னேறிய உக்ரைனிய படைகள்
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்கு சென்ற உக்ரைனிய நகரான பக்முட் மீது உக்ரைனிய படைகள் தொடர்ந்து எதிர்ப்பு தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் பக்முட் நகரை நோக்கி 2 km வரை உக்ரைனிய ராணுவ படை முன்னேறி இருப்பதாகவும், இந்த வாரம் பக்முட் நகரில் உக்ரைன் படை எந்த பகுதிகளையும் இழக்கவில்லை என்றும் உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மாலியார் (Hanna Maliar) தெரிவித்துள்ளார்.
Jose Hernandez/Shutterstock
மேலும் போர் நடைபெறும் ஒட்டுமொத்த முன்வரிசையிலும் உக்ரைனிய படைகள் முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
பொய் தகவல்களை பரப்பும் ரஷ்யா
டெலிகிராமில் இது குறித்து பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மாலியார், பக்முட் நகர் மீதான தாக்குதலை ரஷ்யாவின் வாக்னர் படை குழு தலைமை தாங்கி நடத்தி வருகிறது.
இதில் போர் நிலவரம் குறித்த உண்மையான நிலையை மறைப்பதற்காக ஆயுதப் பற்றாக்குறை போன்ற போலியான தகவல்களை ரஷ்யா பரப்பு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
AP
ஆனால் உண்மையான நிலைமை என்னவென்றால், ரஷ்ய வீரர்கள் தங்களின் திட்டங்களை உணர்ந்து கொள்வதில் தோல்வியடைந்து விட்டனர், மேலும் அவர்கள் மிகப்பெரிய இழப்புகளால் தவித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையே மாதக்கணக்கில் தொடரும் இந்த சண்டையில், இருநாட்டு ராணுவங்களும் மிகப்பெரிய இழப்புகளால் சந்தித்து அவதியடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jose Hernandez/Shutterstock