பிரித்தானியா- அமெரிக்கா ஏவுகணைகள் தாக்குதல் தொடர்பில் ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஏற்கனவே ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியா உட்பட தனது நிலப்பரப்பு முழுவதையும் மீட்க விரும்புவதாக உக்ரைன் தெரிவித்துள்ள விடயம் ரஷ்யாவை எரிச்சலடையச் செய்துள்ளது.
கிரிமியாவைத் தாக்கினால்... ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைன், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு கிரிமியாவைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
Al Jazeera
அப்படி அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏவுகணைகள் கிரிமியாவைத் தாக்குமானால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் முழுமையாக பிரச்சினைக்குள் இழுக்கப்படும் என்று கூறியுள்ளார் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergey Shoigu.
கிரிமியா தாக்கப்பட்டால், பழிக்குப் பழி வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் அவர்.
அதாவது, உக்ரைனுடைய முடிவெடுக்கும் மையங்கள் மீது உடனடியாக தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் Sergey Shoigu.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |