போர் தீவிரமடைந்தால் பிரித்தானியாவே பொறுப்பு! ரிஷி சுனக்-ஜெலென்ஸ்கி சந்திப்பை தொடர்ந்து ரஷ்யா எச்சரிக்கை
பிரித்தானியா போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பினால் போர் தீவிரமடையும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரிஷி சுனக்- ஜெலென்ஸ்கி சந்திப்பு
ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியதிலிருந்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேற்று முதல் முறையாக பிரித்தானியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த ஜெலென்ஸ்கி உக்ரைனுக்கான போர் விமானங்கள் மற்றும் இதர இராணுவ உதவிகள் தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.
handout
மேலும் இந்த சந்திப்பின் போது ரஷ்ய படையெடுப்பின் முதல் நாட்களிலிருந்து உக்ரைனுக்கு பிரித்தானியா அளித்து வரும் ஆதரவிற்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார், அத்துடன் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸையும் சந்தித்து உரையாற்றினார் என பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ரஷ்யா எச்சரிக்கை
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உக்ரைனுக்கான இராணுவ உதவிகள் எதுவும் மேசைக்கு அடியில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்த சிறிது நேரத்தில் ஐரோப்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டனில் உள்ள மாஸ்கோ தூதரகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி,பிரித்தானியா தரப்பில் ரஷ்யாவிற்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் மாஸ்கோ கண்டுபிடிக்கும் என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலை AFP தெரிவித்துள்ளது.
அத்துடன் அடுத்த சுற்று போர் விரிவாக்கத்தின் இரத்தம் தோய்ந்த அறுவடை மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் இதனால் ஏற்படும் இராணுவ மற்றும் அரசியல் விளைவுகளுக்கு பிரித்தானியா தான் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரித்துள்ளது.