தாக்குதலை இன்னும் கடுமையாக்குவோம்! மேற்கு நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கத் தொடங்கினால், ரஷ்யா புதிய இலக்குகளைத் தாக்கும் என்று மேற்கு நாடுகளுக்கு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கப்பட்டால், "நாங்கள் இதுவரை தாக்காத இலக்குகளை நாங்கள் தாக்குவோம்" என்று புடின் Rossiya-1 அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளார்.
அப்படி ஏவுகணைகளை வழங்கத் தொடங்கினால், ரஷ்யா தொடர திட்டமிட்டுள்ள இலக்குகளை புடின் குறிப்பிடவில்லை. ஆனால், இந்த ஆயுத விநியோகம் மேலும் மபுக்கு இழுக்கும் வகையில் தான் அமைகிறது என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் தலைநகரை உலுக்கிய புடினின் திடீர் ஏவுகணை தாக்குதல்., பதற்றம் அதிகரிப்பு
ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ஆயுதக் குவிப்புகளைத் தாக்குவதற்கு M270 மற்றும் M142 HIMARS போன்ற பல ரொக்கெட் ஏவுதள அமைப்புகளை (MLRS) உக்ரைன் நாடுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த வாரம் உக்ரைனுக்கு துல்லியமான HIMARS ரொக்கெட் அமைப்புகளை வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்தார்.
உக்ரைனுக்கு மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை வழங்குவதற்கான அமெரிக்க முடிவு மோதலை அதிகப்படுத்தலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தாலும், போர்க்களத்தில் எந்த அடிப்படை மாற்றங்களையும் கொண்டு வராது என்று புடின் கூறினார்.
மீண்டும் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா, தென்கொரியா