புடின் சிலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பரபரப்பு
ரோமானிய பேரரசர் போன்று வேடம் தரித்த ரஷ்ய ஜனாதிபதி புடினின் சிலையை குடியரசு சோசலிஸ்டு கமிட்டியின் சமூக ஆர்வலர் ஒருவர் பெயிண்ட்பால் துப்பாக்கியால் சுட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது தொடங்கட்ட ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளால், பல்வேறு உலக நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா எதிர்க்கொண்டு வருகிறது.
அதிலும் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்கா, பிரித்தானிய போன்ற சில மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை ரஷ்யாவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி ரஷ்ய பொதுமக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
In St. Petersburg, activists of the “Committee of Republican Socialists” fired a paintball gun at a statue of Putin in the guise of a Roman emperor. pic.twitter.com/A4rBt5ub5i
— NEXTA (@nexta_tv) June 19, 2022
ஆரம்பம் முதலே உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மக்கள், அதற்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டனர், ஆனால் அந்த போராட்டங்களை ரஷ்ய காவல்துறையினர் உடனடியாக செயலிழக்கச் செய்தனர்.
இந்தநிலையில், ரஷ்யாவின் துறைமுக நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், குடியரசு சோசலிஸ்டு கமிட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ரோமானிய பேரரசர் போன்று வேடம் தரித்த ரஷ்ய ஜனாதிபதி புடினின் சிலையை பெயிண்ட்பால் துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தியுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 40 ஆண்டு காலத்தில் இல்லாத வெப்பம்...பரிதவிக்கும் ஸ்பெயின் மக்கள்
இதுத் தொடர்பான வீடியோவை அவரே தனது கமெராவில் பதிவு செய்து இருந்த நிலையில், அது தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.