வாசித்துக் கொண்டிருக்கும்போதே உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய நடிகை மரணம்! அதிர்ச்சி வீடியோ வெளியீடு
உக்ரைனின் ஷெல் தாக்குதலில் ரஷ்ய நடிகை உயிரிழந்தது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான டொனேட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உள்ள குமச்சோவோ (Kumachovo) எனும் கிராமத்தில் ரஷ்ய நடிகையான பொலினா மென்ஷிக் (Polina Menshikh) இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார்.
இராணுவ வீரர்களுக்கான தன்னார்வ கச்சேரியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது திடீரென குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது.
East2West
இதில் 40 வயதான பொலினா மென்ஷிக் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போர்டல் திரையரங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'பொலினா மென்ஷிக் நேற்று டான்பாஸில் ஷெல் தாக்குதலின் விளைவாக நிகழ்ச்சி ஒன்றில் இறந்தார் என்பதை நாங்கள் உங்களுக்கு மிகவும் வேதனையுடன் தெரிவிக்கிறோம்' தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Polina Menshikh / VK
உக்ரேனியப் படைகளின் ஊடுருவல் மூலம், சமீபத்திய வாரங்களில் நடத்தப்பட்ட உக்ரேனிய ஷெல் தாக்குதலின் விளைவாக பொதுமக்கள் பலியாகி வருகின்றனர் என டொனேட்ஸ்க் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |