கைப்பற்றி விட்டோம்... ரஷ்யா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ரஷ்ய படைகள் உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடைபெற்று வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போது, கெர்சன் பிராந்தியத்தின் முழுப் பகுதியையும் ரஷ்ய ஆயுதப்படைகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் Konashenkov, Donetsk மக்கள் குடியரசின் (டிபிஆர்) துருப்புக்கள் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்கின்றன மற்றும் உக்ரேனிய படைகளின் பாதுகாப்பை தகர்த்துள்ளனர்.
அவர்கள் Donetsk பகுதியில் Panteleimonovka-ஐ கைப்பற்றியுள்ளனர் என கூறினார்.
ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட அனைத்து வெளிநாட்டு ஆயுதங்களும் Lugansk மற்றும் Donetsk மக்கள் போராளிகளுக்கு வழங்கப்படுகின்றன என Konashenkov கூறினார்.
ரஷ்ய வான்வழிப் படைகளின் விமான மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் 16 விமான இலக்குகளை சுட்டு வீழ்த்தின.
இதில் ஆறு பைரக்டர் TB-2 உட்பட உக்ரேனிய விமானப்படையின் ஒரு Su-24 மற்றும் Su-25 விமானங்கள், ஒரு Mi-8 ஹெலிகாப்டர் மற்றும் பதின்மூன்று உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் அடங்கும் என கூறினார்.