ரஷ்யாவை கடல் வழியாக மிரட்டிய உக்ரைன்: கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
ரஷ்ய கருங்கடல் கடற்படை தளத்தை உக்ரேனிய கடல் ட்ரோன்கள் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருங்கடல் துறைமுகம் அருகே
குறித்த கடற்படை தளமானது நோவோரோசிஸ்க் பகுதியில் அமைந்துள்ள கருங்கடல் துறைமுகம் அருகே உள்ளது. தொடர்புடைய துறைமுகமானது ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதி தளமாக செயல்பட்டு வருகிறது.
@Rybar
குறித்த தாக்குதலில் ரஷ்ய கப்பல்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றே சர்வதேச ஊடக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோவோரோசிஸ்க் பகுதியில் இருந்தே கஜகஸ்தானுக்கு பெரும்பகுதி எண்ணெய் ஏற்றுமதி முன்னெடுக்கப்படுகிறது. உக்ரைன் ட்ரோன் தாக்குதலை அடுத்து கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வலுக்கட்டாயமாக வெளியேறிய பின்னர், உக்ரைன் துறைமுகங்கள் மீதும் தானிய சேமிப்பு கிடங்குகள் மீதும் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
60,000 டன் தானியங்கள் சேதம்
இந்த நிலையிலேயே, தற்போது ட்ரோன்கள் ஊடாக ரஷ்ய கடற்படை தளத்தை குறிவைத்து, உக்ரைன் தாக்குதல் முன்னெடுத்துள்ளது. முன்னதாக அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் தெரிவிக்கையில், தானியங்களை வைத்து மிரட்டும் போக்கை ரஷ்யா கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
@getty
மேலும், உலகில் பசியால் வாடும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை உங்களின் மனசாட்சியற்ற போரினால் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்துங்கள் எனவும் ரஷ்யாவை கேட்டுக்கொண்டார்.
இந்த வார தொடக்கத்தில், ஒடேசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் ஆகிய பெரிய கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா தாக்கியது. இதில் உக்ரேனுக்கு சொந்தமான 60,000 டன் தானியங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |