நோர்வே கடற்பரப்பு மீது பறந்த ரஷ்ய குண்டுவீச்சு விமானம்! ஜேர்மனி விளக்கம்: வீடியோ
நோர்வே கடற்பரப்பு மீது ரஷ்யாவின் இரண்டு Tu-160 ரக ஏவுகணை கேரியர் குண்டுவீச்சு விமானங்கள் தங்களது திட்டமிட்ட பயண நிறைவை செய்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை குண்டுவீச்சு விமானம்
ரஷ்யாவின் இரண்டு Tu-160 ரக ஏவுகணை கேரியர் குண்டுவீச்சு விமானங்கள் பேரண்ட்ஸ்(Barents) மற்றும் நோர்வே கடல்களுக்கு மேல் 14 மணி நேரத்திற்கும் மேலான நீடித்த பயணத்தை நிறைவு செய்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த Tu-160 ரக ஏவுகணை குண்டுவீச்சு விமானம், தொலைதூர இடங்களில் உள்ள இலக்குகளை அழிக்க உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை உலகின் அதிக எடை கொண்ட போர் விமானம் என்றும், மிகப்பெரிய சூப்பர்சோனிக் விமானம் என்றும் கருதப்படுகிறது.
Two Tu-160 strategic bombers of the Russian Aerospace Forces made a scheduled flight over the international waters of the Barents and Norwegian Seas lasting more than 14 hours. pic.twitter.com/Z3V60mJXCK
— Blackrussian (@Blackrussiantv) April 26, 2023
இது தொடர்பான ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் டெலிகிராம் அறிக்கையில், Tu-160 ரக விமானத்தின் இந்த நீண்ட தூர இயக்கத்தில் இரவும் பகலுமாக காற்றில் எரிபொருள் நிரப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி விளக்கம்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது, பால்டிக் கடல் மீதான சர்வதேச வான்வெளியில் நுழைந்த 3 ரஷ்ய போர் விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டத்தை தொடர்ந்து இது வந்துள்ளது என ஜேர்மன் விமானப்படை தங்களது கூற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
Tu-160 ரக விமானம் உலகின் அதிவேக போர் ஜெட் விமானமான MiG-31 ஆல் வழிநடத்தி செல்லப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
Twitter