ஒற்றை தோட்டா... ரஷ்ய தளபதிக்கு 5,900 அடி தொலைவில் இருந்து சீறி வந்த மரணம்
ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளது, போரில் முதல் முறை என கூறப்படுகிறது.
உக்ரைனின் பேய் படை
முற்றுகையிடப்பட்ட பக்மூத் நகரத்தில் வைத்தே அந்த ரஷ்ய தளபதி கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் பேய் படை என அறியப்படும் 12 தொலைதூர துப்பாக்கி சுடும் வீரர்களில் இந்த ஆல்பாவும் ஒருவர்.
Shutterstock
பக்மூத் நகரம் ரஷ்யர்களால் முற்றுகையிடப்பட்டதன் பின்னர், அந்த வீரர்களை இலக்கு வைத்து தாக்கி வந்துள்ளது பேய் படை. ஆல்ஃபாவால் 5,900 அடி தொலைவில் இருந்து கொல்லப்பட்டவர் பிராந்தியத்தில் அந்த படைகளின் துணைத் தளபதி என உக்ரைன் ராணுவம் உறுதி செய்துள்ளது.
அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், ட்ரோன் விமானங்களால் அந்த தளபதி அடையாளம் காணப்பட்டார் எனவும், அவர் தற்போது இந்த உலகில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
மரணம் எங்கிருந்தும் சீறி வரலாம்
மிகவும் கடினமான முயற்சி இதுவென குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி, உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய பின்னர் இதுவே அதிக தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படும் முதல் சம்பவம் என்றார்.
Shutterstock
மரணம் எங்கிருந்து வேண்டுமானாலும் சீறி வரலாம் என இனி எதிரிகள் திணறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை அளிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்ச்சைக்குரிய இந்த கொத்து குண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |