ரஷ்யாவில் பெட்ரோல் பங்கில் பாரிய தீவிபத்து; 30 பேர் பலி
ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு ரஷ்ய பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 105 பேரில் 13 குழந்தைகள் உள்ளடங்குவதாக ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Russian Emergencies Ministry
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) உள்ளூர் நேரப்படி இரவு 9:40 மணிக்கு (18:40 GMT) ரஷ்யாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸ்பியன் கடலின் கரையோரத்தில் உள்ள நகரமான மகச்சலாவில் நெடுஞ்சாலையை ஒட்டிய கார் சர்வீசிங் சென்டரில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோல் நிலையத்துக்கும் தீ பரவியது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Russian Emergencies Ministry
தீயின் தீவிரம் அதிகரித்ததால், சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பரவியது. உள்ளூர் செய்தி நிறுவனமான ரியா நோவோஸ்டி, கார் பார்க்கிங்கில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதையும், அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடிப்பையும் காட்டும் வீடியோவை டெலிகிராமில் வெளியிட்டது.
சுமார் 6,460 சதுர அடி பரப்பளவில் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் 260 தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கார் ஷெட்டில் இருந்த வாகனங்கள் முற்றிலும் தீயில் கருகின.
Russian Emergencies Ministry/handout via Reuters
Russian Emergencies Ministry
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
russia dagestan petrol station fire, Russia Petrol Bunk fire, explosion at petrol station