சக வீரர்களை கொன்று தள்ளும் ரஷ்ய ராணுவம்: அம்பலமாகும் அதிர்ச்சி காணொளி
உக்ரைன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும் சக வீரர்களை ரஷ்ய ராணுவத்தினர் கொன்று தள்ளும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்தது 7 ரஷ்ய வீரர்கள்
உக்ரைன் ட்ரோன் விமானம் ஒன்று பதிவு செய்துள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. குறைந்தது 7 ரஷ்ய வீரர்கள் உயிருக்கு பயந்து புதர்களுக்கு நடுவே ஓடி ஒளியும் காட்சிகள் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
சிலர் தலைக்கவசம் ஏதுமின்றி காணப்படுவதாகவும், ஆயுததாரிகளான மூன்று வீரர்கள் புதர்கள் நடுவில் இருந்து வெளியே வருகின்றனர். இந்த ஆயுததாரிகள், போர்க்களத்தில் இருந்து வெளியேறும் வீரர்களை தடுத்து நிறுத்த ரஷ்ய ராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, தப்பிச் செல்ல முயற்சிக்கும் வீரர்களை கொல்லவும் இவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றே உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த ஆயுததாரிகள் எச்சரிக்கை அளிக்கும் வகையில் துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டுள்ளனர்.
@telegram
பின்னர் அந்த வீரர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனையடுத்து அந்த 7 ரஷ்ய வீரர்களையும் நெருங்கி, அவர்கள் இறந்து விட்டார்களா என சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
தப்பிக்க முயற்சிக்கும் வீரர்கள்
வெறும் 14 நொடிகள் மட்டும் பதிவாகியுள்ள அந்த காணொளியானது டெலிகிராம் சமூக ஊடகம் ஒன்றில் முதலில் வெளியானது. மேலும், அந்த காணொளியானது ட்ரோன் விமானத்தால் பதிவு செய்யப்பட்டது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தால் தொடர்புடைய எச்சரிக்கை ஒன்று விடப்பட்டது. அதில், போர்க்களத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வீரர்களை கொல்ல ரஷ்யா குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும்,
@telegram
அவர்கள் முன்கள வீரர்களை வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும் இந்த தந்திரமானது செம்படையால் பயன்படுத்தப்பட்டது எனவும் இரண்டாம் உலகப் போரின் போது ஜோசப் ஸ்டாலினால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது.