அமைதிப் பேச்சுவார்த்தை முடிந்த பின் தாக்கிய ரஷ்யா! இழிவான போர்க்குற்றம் என கொந்தளித்த உக்ரைன்
ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் பிராந்தியம் ஒன்றில் 9 பேர் உயிரிழந்தனர்.
அமைதிப் பேச்சுவார்த்தை
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக இருதரப்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், பேச்சுவார்த்தை முடிந்த சில மணிநேரங்களில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய ட்ரோன் ஒன்று உக்ரைனின் பிராந்தியமான சுமியில் சிறிய ரக பேருந்து மீது விழுந்துள்ளது.
போர்க்குற்றம்
இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உக்ரைனின் தேசிய காவல்துறை டெலிகிராமில் ஒரு பதிவில், "இது மற்றொரு ஷெல் தாக்குதல் மட்டுமல்ல - இது ஒரு இழிவான போர்க்குற்றம்" என தெரிவித்துள்ளது.
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், "அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரைன் மற்றும் பிற நாடுகள் முன்மொழிவது போல், இப்போதே கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக, புடின் பொதுமக்களுக்கு எதிராக தொடர்ந்து போரை நடத்தி வருகிறார்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |