உக்ரைன் தலைநகரை தாக்கிய ரஷ்ய ட்ரோன்: தடுத்தபோது விழுந்த குப்பையால் ஒருவர் மரணம்
ரஷ்யாவின் ட்ரோன் தாக்கியதில் உக்ரைனின் கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டார்.
வான்வழி தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ரஷ்யாவின் ட்ரோன் வான்வழி தாக்குதல் நடத்தியது.
எனினும் உக்ரைன் அதனை சுட்டு வீழ்த்தியது. அப்போது ட்ரோனில் இருந்து விழுந்த குப்பைகளால் ஒரு லொறி சாரதி கொல்லப்பட்டார்.
கீவ் பிராந்திய ஆளுநர் மைகோலா கலாஷ்னிக் கூறுகையில், "கீவ் பிராந்தியத்தில் எதிரிகளின் வான்வழி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்" என சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
93 ட்ரோன்கள்
இந்த தாக்குதலில் வீட்டின் மீது ட்ரோன் பகுதிகள் விழுந்ததில் 16 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை உட்பட பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா ஒரே இரவில் 93 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் நகர மேயர் கூறும்போது, கீழே விழுந்த ட்ரோன்கள் கீவ்வின் இரண்டு மாவட்டங்களில் விழுந்ததாகவும், ஆனால் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |