விளாடிமிர் புடினின் மொத்த ரகசியங்களையும் அறிந்தவர்... மர்மமான முறையில் திடீர் மரணம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய ரகசியங்கள் பல அறிந்த ராணுவ தளபதி ஒருவர் மர்மமான முறையில் திடீரென்று மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த ரகசியங்களும் அறிந்தவர்
விளாடிமிர் புடினுக்கு சொந்தமானது என கூறப்படும் 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரண்மனை தொடர்பில் மொத்த ரகசியங்களும் அறிந்தவர் இந்த ராணுவ தளபதி என கூறப்படுகிறது.
Credit: East2West
69 வயதான ஜெனடி லோபிரேவ் என்ற ராணுவ தளபதியே சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மரணமடையும் புடினுக்கு நெருக்கமான இரண்டாவது முக்கிய நபர் இந்த ஜெனடி லோபிரேவ் என கூறுகின்றனர்.
புதன்கிழமை 58 வயதான ராணுவ தளபதி ஜெனடி ஜிட்கோ என்பவர் திடீரென்று மரணமடைந்த தகவல் வெளியானது. முக்கிய ராணுவ பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், திடீரென்று அவர் மரணமடைந்துள்ள தகவல் வெளியானது.
திங்களன்று திடீரென்று நோய்வாய்ப்பட்ட லோபிரேவ் மூச்சுவிட முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. பிணையில் வெளிவர தகுதி பெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு விஷமளிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Credit: East2West
மிகவும் விசுவாசமான பாதுகாப்பு அதிகாரி
முறைகேடு, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 2017ல் 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றே தளபதி லோபிரேவ் கூறி வந்தார்.
ரஷ்ய மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான விளாடிமிர் புடினின் தனிப்பட்ட மாளிகையின் மொத்த கட்டுமானமும் தளபதி லோபிரேவ் மேற்பார்வையில் நடந்ததாகவே கூறப்படுகிறது.
Credit: East2West
தளபதி ஜெனடி லோபிரேவ் கைதாகும் வரையில் விளாடிமிர் புடினின் மிகவும் விசுவாசமான பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்துள்ளார். திங்களன்று தளபதி ஜெனடி லோபிரேவ் தமது மகனுடன் பேசியுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் பேச முடியாமல் தடுமாறியதாகவும், மூச்சுவிட முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது. தினசரி 9 மைல்கள் நடைப்பயிற்சி மேற்கொள்பவர் திடீரென்று நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |