கண்ணிவெடி மீது கால் வைத்த ரஷ்ய தளபதி: உக்ரைன் சென்றபோது நிகழ்ந்த பயங்கரம்
உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக சென்ற ரஷ்ய தளபதி ஒருவர் கண்ணிவெடியில் கால் வைத்ததால் உடல் சிதறி பலியானார்.
கண்ணிவெடி மீது கால் வைத்த ரஷ்ய தளபதி
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து, புடின் பலி கொடுத்து வருவது தனது போர் வீரர்களை மட்டுமல்ல, தனது தளபதிகளையும்தான்.
அவ்வகையில், உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக சென்ற ரஷ்ய தளபதி ஒருவர் கண்ணிவெடியில் கால் வைத்ததால் உடல் சிதறி பலியானார்.
Credit: X
அவரது பெயர், Arman Ospanov. ரஷ்ய விமானப்படைகளின் ஒரு பிரிவின் தலைவரான Arman Ospanov, உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்பு உக்ரைன் பிராந்தியங்களுக்குச் சென்றுள்ளார்.
ஆனால், அவர் தவறுதலாக கண்ணிவெடியில் கால் வைத்ததால் உடல் சிதறி பரிதாபமாக பலியானார். இந்த தகவலை ரஷ்ய தரப்பும், உக்ரைன் தரப்பும் உறுதி செய்துள்ளன.
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து, இதுவரை 365,170 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.
Credit: AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |