எந்த நிபந்தனைகளும் இல்லாமல் 31 பேரை விடுவிக்க பட்டியல் தயார் - ரஷ்யாவின் மனித உரிமைகள் தலைவர்
ரஷ்யாவும், உக்ரைனும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் பட்டியலை பரிமாறிக்கொண்டதாக, மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
குடிமக்களின் பட்டியல்
ரஷ்யாவின் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான TASSயின்படி, உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் பரஸ்பரம் திருப்பி அனுப்பும் 31 உக்ரேனிய குடிமக்களின் பட்டியலைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையர் Tatyana Moskalkova, தென்மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் வசிக்கும் 31 பேரை உக்ரைன் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதாக கூறினார்.
மேலும் அவர், அவர்கள் அனைவரும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் திருப்பி அனுப்ப உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
திகதியை தீர்மானிக்க
அத்துடன் பரிமாற்றத்திற்கான ஒரு குறிப்பிட்ட திகதியை தீர்மானிக்க இந்த வாரம் பேச்சுவார்த்தைகளில் டிமிட்ரோ லுபினெட்ஸுடன் நாங்கள் உடன்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், சாத்தியமான பரிமாற்றத்திற்கான விவாதங்கள் குறித்து உக்ரைனிடம் இருந்து உடனடி உறுதிப்படுத்துதல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |