சோவியத் யூனியனுக்காக ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர் 92 வயதில் தற்கொலை!
சோவியத் யூனியனின் முதல் இரண்டு-நிலை ஹைட்ரஜன் குண்டை உருவாக்கிய ரஷ்ய இயற்பியலாளர் 92 வயதில் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அணு இயற்பியலாளர்
1950களில் Andrei Sakharovவின் கீழ் சோவியத் யூனியனின் அணு இயற்பியலாளர் கிரிகோரி கிளினிஷோவ் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து RDS-37 எனும் இரண்டாம்-நிலை ஹைட்ரஜன் குண்டை கிளினிஷோவ் உருவாக்கினார்.
இது 1955ஆம் ஆண்டு நவம்பரில் சோதிக்கப்பட்டதுடன், சோவியத் ஹைட்ரஜன் குண்டு சோதனைகளுக்கும் வழி வகுத்தது.
militaryrussia.ru
92 வயதில் தற்கொலை
இந்த நிலையில் கிளினிஷோவ் (92), மத்திய மாஸ்கோவில் உள்ள தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அவரது மகள் தனது தந்தையின் மரணக் குறிப்பை கண்டுபிடித்ததாக தெரிய வந்துள்ளது. அதில், மனைவியின் இறப்பினால் வருத்தப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படுவதாகவும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
iStock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |