ரஷ்ய படைகளின் அட்டூழியம்...உக்ரைன் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்!
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 358 குழந்தைகள் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைவது மற்றும் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா தனது முழுநீள போர் நடவடிக்கையை உக்ரைன் மீது கடந்த 24ம் திகதி தொடங்கியது.
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை தொடர்ந்து பெரும்பாலான பெண்கள், குழந்தைகள், முதியோர் என சுமார் 13 மில்லியன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
#Russian invaders killed 358 children in #Ukraine since the start of the full-scale invasion in February. 693 children were wounded. pic.twitter.com/t1OqpTOrEi
— NEXTA (@nexta_tv) August 3, 2022
இதனைத் தொடர்ந்து நேற்று ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய படைகளால் சுமார் 5,327 உக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 7,257 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தநிலையில் புதன்கிழமையான இன்று வெளியாகியுள்ள தகவலில், ரஷ்ய படைகளால் சுமார் 358 உக்ரைனிய குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரியவந்துள்ளது.
According to the #UN, since the beginning of the war in #Ukraine, 5,327 civilians have been killed and 7,257 more have been injured. pic.twitter.com/c3wud6AGBi
— NEXTA (@nexta_tv) August 2, 2022
கூடுதல் செய்திகளுக்கு: போருக்கு தயாராகும் சீனா...தைவான் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயார்
மேலும் 693 உக்ரைனிய குழந்தைகள் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.