நோட்டோ எல்லைக்கு அருகே...ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த RAF விமானங்கள்
நோட்டோ வான்வெளிக்கு அருகே பறந்த 2 ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் 1 உளவு விமானத்தை RAF விமானிகள் இடைமறித்தனர்.
நோட்டோ வான்வெளிக்கு அருகே ரஷ்ய விமானம்
பால்டிக் கடலுக்கு மேலே நேட்டோ வான்வெளிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த 2 ரஷ்ய போர் விமானங்களையும் ஒரு உளவு விமானத்தையும் RAF Typhoon ஜெட் விமானங்கள் இடைமறித்துள்ளன.
கலினின்கிராட்டை(Kaliningrad)தளமாகக் கொண்ட இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்டோனிய விமான மண்டலத்தின் வடமேற்கு பகுதி வழியாக தெற்கே பறந்தது.
Royal Air Force
அப்போது ஜேர்மன் விமானப்படையுடன் கூட்டுப் பணியில் ஈடுபட்டு இருந்த RAF விமானிகள், பின்லாந்து வளைகுடாவில் பறந்த மூன்று ரஷ்ய விமானங்களை இடைமறித்தனர்.
வழக்கமான இடைமறிப்பு
ரஷ்யாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து போலந்துக்கு அருகில் உள்ள கலினின்கிராட் என்க்ளேவ் பகுதிக்கு பறந்து கொண்டிருந்த ரஷ்ய உளவுத்துறை விமானம் ஒன்று என அடையாளம் காணப்பட்டதாக RAF(Royal Air Force) தெரிவித்துள்ளது.
மேலும் அடிக்கடி ரஷ்ய இராணுவ விமானம் பால்டிக் கடல் மீது பறப்பதைப் பார்க்கிறோம், எனவே இது எங்களுக்கு ஒரு வழக்கமான இடைமறிப்பு என தெரிவித்துள்ளனர்.
Royal Air Force
இருப்பினும், இந்த விமானங்களை இடைமறிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் நேட்டோ வான்வெளியின் கூட்டுப் பாதுகாப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானதாக உள்ளது" என்று RAF பைலட் படையின் இணையதள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RAF மற்றும் ஜெர்மன் டைஃபூன்கள் விமானத்தை ஸ்வீடிஷ் விமானப்படையிடம் ஒப்படைப்பதற்கு முன் அப்பகுதி வழியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.