நடுவானில் ரஷ்யாவின் Mi-28 ஹெலிகாப்டரை சுட்டு தவிடுபொடியாக்கிய உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்யாவின் Mi-28 ஹெலிகாப்டை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகே தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை Luhansk-ல் ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன் படையினர் சுட்டு வீழத்தியுள்ளனர்.
Luhansk-ல் உள்ள Holubivka கிராம வான்வெளியில் குறித்த ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீடியோவில், வான்வெளியல் பறந்து செல்லும் ரஷ்ய ஹெலிகாப்டரை, பின் பக்கமாக ஏவுகணை ஒன்று தாக்குகிறது.
இதனையடுத்து, தீப்பற்றி ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.
கிவ் அருகே பயங்கர மோதல் வெடித்துள்ளது! நகர வாசிகளுக்கு மேயர் எச்சரிக்கை
Incredibly clear footage of a Russian Mi-28 helicopter being shot down over the village of Holubivka in Luhansk this morning. pic.twitter.com/Y7YecfJiuZ
— Kyle Glen (@KyleJGlen) April 1, 2022
ஹெலிகாப்டரில் பயணித்த வீரர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.