நெருப்பு கோளமான ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்... போர் அபாயத்தில் ஐரோப்பா
தொடர்ந்து இரண்டாவது நாளாக உக்ரைன் போர் வல்லுநர்கள் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ட்ரோன்களால் பழி தீர்க்க, மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலுக்கு ஐரோப்பா தள்ளப்பட்டுள்ளது.
போரின் அபாயத்திற்கு தள்ளும்
ரஷ்யா மற்றும் உக்ரைனின் தற்போதைய சூழலை மதிப்பிட்டுள்ள பிரித்தானிய அரசாங்கம், நாம் விரைவில் ஒரு போர்ச் சூழலுக்குத் தள்ளப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கியது. அதில், ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று நெருப்புக்கு இரையானது.
ஆனால், உக்ரைன் இராணுவத்தின் தற்போதைய கடும் போக்கு நடவடிக்கை, ஐரோப்பாவை போரின் அபாயத்திற்கு தள்ளும் என இங்கிலாந்து ஆயுதப்படை அமைச்சரும் போர் வீரருமான அல் கார்ன்ஸ் எச்சரித்துள்ளார்.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள பிரித்தானியா தயாராக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேட்டோ தலைவர் மார்க் ரூட் விடுத்துள்ள எச்சரிக்கையுடன் இது ஒத்துப்போவதால், ஐரோப்பாவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.
ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் பொருட்டு உக்ரைன் முன்னதாக ரஷ்ய நகரமான யாரோஸ்லாவைத் தாக்கியது. அதில், Yaroslavnefteorgsintez சுத்திகரிப்பு நிலையம் தீக்கிரையானது.

ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் உற்பத்தியைத் தடை செய்வதற்காக, உக்ரைன் ஜூலை மாதம் முதல் ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
130 விமானங்கள் ரத்து
Yaroslavnefteorgsintez சுத்திகரிப்பு நிலையமானது ரஷ்யாவின் முதல் ஐந்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

முழு அளவிலான போர் தொடங்கிய பிறகு உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை அடுத்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள், யாரோஸ்லாவ் நகர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் ஆயுதப் படைகள் வியாழக்கிழமை பல்வேறு வகையான 300 ட்ரோன்களை ஏவியது. மேற்கு மற்றும் மத்திய ரஷ்யா முழுவதும் உள்ள இலக்குகளை, கிட்டத்தட்ட 1,500 மைல் தூரம் உக்ரைன் தரப்பு கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
உக்ரைன் ட்ரோன் அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய தலைநகரைச் சுற்றியுள்ள நான்கு விமான நிலையங்களும் மூடப்பட்டதால், 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.

சர்ச்சைக்குரிய டான்பாஸ் பிராந்தியத்தின் ஒரு பகுதியை இராணுவமற்ற இடைநிலை மண்டலமாக மாற்றும் சமாதானத் திட்டங்களுக்குத் தான் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுவதை உக்ரைன் மறுத்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |