உக்ரைனில் அதிகரிக்கும் நெருங்கிய போர் சண்டை: ஆயுத பற்றாக்குறையால் சிக்கலில் ரஷ்யா
உக்ரைனில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே நெருக்கமான போர் அதிகரித்து வருவதால், ரஷ்ய இருப்பு படையினர் ஆயுதங்களுடன் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு வருவதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரில் களமிறங்கும் ரஷ்ய இருப்பு படைகள்
போரில் உக்ரைனின் “கான்கிரீட் ஸ்ட்ராங் பாயிண்ட்” என்று அழைக்கப்படும் வலுவான படை தளம் மீது தாக்குதல் நடத்த துப்பாக்கிகள் மற்றும் மண்வெட்டி ஆயுதங்களுடன் ரஷ்ய இருப்பு படைகள் களமிறங்கி இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் (MoD) தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய உளவுத்துறை புதுப்பிப்பில், இந்த மண்வெட்டி ஆயுதங்கள் நேருக்கு நேர் சண்டைகளுக்கு பயன்படும் கருவிகள் என்று தெரிவித்துள்ளது.
Reuters
MPL-50 இன்ட்ரென்சிங் கருவி முதன்முதலில் 1869 இல் வடிவமைக்கப்பட்டது மற்றும் அதன் பிறகு அதில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. இது "மிருகத்தனமான மற்றும் குறைந்த தொழில்நுட்ப சண்டைக்கு" பயன்படுத்தப்படுகிறது என்று உளவுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆயுத பற்றாக்குறை
பிரித்தானிய உளவுத்துறை அறிக்கையில், உக்ரைனில் "உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ நடவடிக்கைக்கு ரஷ்யா தயாராக இல்லை" என்று ரஷ்ய இருப்பு படை அதிகாரி ஒருவர் விவரித்ததாக தெரிவித்துள்ளது.
போர்முனையில் நெருங்கிய சண்டை அதிகரித்து வருவதாலும், ரஷ்யாவிடம் ஆயுதங்கள் குறைவாக இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Sky News