ரஷ்யாவில் சக மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய 14 வயது மாணவி: தந்தையிடம் விசாரணை
ரஷ்யாவில் சக மாணவர்கள் மீது 14 வயது பள்ளி மாணவி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய 14 வயது மாணவி
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் நகரில்(Bryansk) உள்ள பள்ளி ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், 5 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய சிறுமி தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
The Associated Press
சிறுமி நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகமான ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 14 வயது சிறுமி பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
Reuters
மேலும் சிறுமிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து அவரது தந்தையிடம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் மாணவி துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |