சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி! அதிர வைத்த காரணம்
உக்ரேனிய பெண்களை கற்பழிக்க ரஷ்ய ராணுவ வீரரான தனது கணவருக்கு அனுமதி கொடுத்த பெண், சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உக்ரேனிய பெண்களை வன்புணர்வு செய்ய கோரிய மனைவி
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படையினர் உக்ரேனிய பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, ரஷ்ய ராணுவ வீரர் ஒருவருக்கு அவரது மனைவி தொலைபேசியில் உக்ரேனிய பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய கூறும் தொலைபேசி உரையாடலின் குரல்பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக Radio free europe and Radio liberty என்ற பத்திரிகை விசாரணை நடத்தியது. அப்போது குறித்த தொலைபேசியில் பேசியவர்கள் ரோமன் பைக்கோஸ்கி மற்றும் அவரது மனைவி ஒல்கா பைகோவ்ஸ்கயா என்பது தெரிய வந்தது.
சமூக வலைத்தளங்களில் அவர்களின் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அதில் பேசியது தாங்கள் இல்லை என்று கூறினர். ஆனாலும் அவர்களின் குரல் தான் என்பது உக்ரேனிய அதிகாரிகளின் உதவியுடன் உறுதிப்படுத்தப்பட்டது.
தேடப்படும் நபர்களின் பட்டியல்
இந்த நிலையில் ஓல்காவின் பெயர் சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவரது நடவடிக்கைகள் போர்க்காலத்தில் குடிமக்களின் மக்கள்தொகை பாதுகாப்பிற்கான வன்முறைக்கு எதிரான சட்டம் 27.2-ஐ மீறுவதாக இருப்பதாகவும், ஜெனீவா ஒப்பந்தங்களை மீறுவதாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் ஓல்கா 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை எதிர்கொள்வார் என்றும், கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தடுப்பு நடவடிக்கைகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக
ரஷ்ய படையெடுப்பாளர்களின் மனைவிகள் உக்ரேனிய பெண்களை கற்பழிக்க தங்கள் கணவர்களை அனுமதிக்கிறார்கள் என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.