ரஷ்ய வீரர்கள் தன்னை தானே வெடிக்க செய்து கொள்ளும் அவலம்! பிரித்தானிய உளவுத்துறை தகவல்
உக்ரைன் போரில் சண்டையிட முடியாத அளவிற்கு ரஷ்ய வீரர்கள் குடிபோதையில் இருப்பதாக பிரித்தானிய ரகசிய சேவைகள் தகவல் தெரிவித்துள்ளது.
குடிபோதையில் ரஷ்ய வீரர்கள்
சமீபத்திய அறிக்கைகள் அடிப்படையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்நோக்கி நகர்வதில் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், மிகவும் குறைவான பகுதிகளை மட்டுமே ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய படைகளின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு அவர்களது அதிகப்படியான குடிப்போதையே காரணம் என பிரித்தானிய உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Getty
மிக அதிக எண்ணிக்கையிலான தவறான சம்பவங்கள், குற்றங்கள் மற்றும் இறப்புகளுக்கு ரஷ்ய வீரர்களின் போதை பழக்கங்களே காரணம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
சில நேரங்களில் மது போதையில் ரஷ்ய வீரர்கள் சுதந்திரமாக வெடிமருந்துகளை கையாண்டு தன்னை தானே வெடிக்க செய்து கொள்கின்றனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் இந்த மோசமான போதைப்பழக்கம் போர் செயல்திறனுக்கு தீங்கு விளைவிப்பவை என்று ரஷ்ய தளபதிகள் அடையாளம் காணலாம் என்று MoD தெரிவித்துள்ளது.
Getty
புடின் ”இறந்த மனிதர்”
இதற்கிடையில் போர் வெறி பிடித்த ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு” இறந்த மனிதர் என்றும், அவர் விரைவில் படுகொலை செய்யப்படுவார் என்று முன்னாள் சிஐஏ தலைவர் ஜேம்ஸ் ஓல்சன் தெரிவித்துள்ளார்.
Getty
புடினின் மறைவு கடந்த 12 மாதங்களாக அவர் மீது நீடித்து வருகிறது.
இருப்பினும் முன்னாள் சிஐஏ தலைவர் ஜேம்ஸ் ஓல்சன், ஜனாதிபதி பதவியும், புடினின் வாழ்க்கையும் விரைவில் முடிவடையும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.