உக்ரைனை தாக்க உதவிய ரஷ்ய உளவாளி: தேசத் துரோக குற்றச்சாட்டு
உக்ரைன் நகரம் ஒன்றின்மீது செவ்வாயன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று பதின்ம வயது பிள்ளைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்ட விடயம் அங்கு பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
இரட்டைப்பிள்ளைகள்
உயிரிழந்தவர்களில், 14 வயதான இரட்டை பிள்ளைகளான Yuliya மற்றும் Anna Aksenchenkoவும், 17 வயதான ஒரு பெண் பிள்ளையும் அடக்கம். Kramatorsk நகர கவுன்சில் அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரஷ்ய ஏவுகணைகள் அந்த அழகு தேவதைகளின் இதயத்துடிப்பை நிறுத்திவிட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது.
TELEGRAM
அந்த தாக்குதலில் 60 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் புகழ்பெற்ற உக்ரைன் எழுத்தாளரான பெண் ஒருவரும், கொலம்பியா நாட்டவர்கள் சிலரும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் உணவகம் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்தபோது ரஷ்ய ஏவுகணைகள் அந்த உணவகத்தைத் தாக்கின.
தாக்க உதவிய ரஷ்ய உளவாளி
இந்த தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ஒருவர் ரஷ்ய இராணுவத்திற்கு, அந்த உணவகத்தைக் காட்டும் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளதை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்த நபர் நேற்று பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அது குறித்து நேற்றிரவு பேட்டி ஒன்றை அளித்த உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய உளவாளி என கருதப்படும் அந்த நபர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படும் என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |