உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா தாக்குதல்., அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் சபோரிஜ்சியா நகரில் ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் தென்கிழக்க பகுதியில் உள்ள சபோரிஜ்சியா நகரத்தில், ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 63 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சாலைகளில் பலரின் உடல்களை சிதறடிக்க செய்ததோடு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அழித்தது.
தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற அடிப்படை வசதிகளும் சேதமடைந்தன. குப்பைகள் பஸ்கள் மற்றும் டிராம்களை மோதியது.
ரஷ்ய படைகள் இரண்டு guided குண்டுகளைப் பயன்படுத்தி குடியிருப்பு பகுதியை தாக்கியதாக மாநில ஆளுநர் Ivan Fedorov தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் மிகக்கடுமையான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது X கணக்கில், இது மனித நேயமற்ற தாக்குதல் எனக் கூறி, ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் மேலும் அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அந்த தாக்குதலுக்குப் பின்னரும் மேலும் குண்டுவீச்சுகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபோரிஜ்சியாவுக்கு தெற்கில் உள்ள ஸ்டெப்னோகிர்ஸ்க் நகரத்தில், ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.
மேலும், கெர்சன் பகுதியில் பல்வேறு பகுதிகளின் மீது தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia strike Ukrainian city of Zaporizhzhia, russia ukraine war