உக்ரைன் போர் நேரத்தில் மற்றொரு நாட்டிற்கு ரஷ்யா கொடுத்த ஷாக்! வெளியான ஆதாரம்
ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக டென்மார்க் ராணுவம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் 115 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா மற்றொரு நாட்டை சீண்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக டென்மார்க் ராணுவம் தெரிவித்துள்ளது. பால்டிக் கடலில் உள்ள கிறிஸ்டியன்சோ தீவு அருகே நேற்று அதிகாலையில் ரஷ்ய கொர்வெட் இரண்டு முறை டேனிஷ் கடற்பகுதியில் நுழைந்ததாக டேனிஷ் ஆயுதப் படைகளின் பாதுகாப்புக் கட்டளை தெரிவித்துள்ளது.
AP
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க டென்மார்க் ரஷ்ய தூதரை வரவழைத்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் Jeppe Kofod கூறியுள்ளார்.
இந்த வகையான நடவடிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ரஷ்ய தூதரிடம் மிக தெளிவாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.