நடு கடலில் குளித்துக்கொண்டிருந்த ரஷ்ய இளைஞரை கடித்து தின்ற சுறா! திடுக்கிடும் காட்சிகள்
உக்ரைன் போருக்குச் செல்வதை தவிர்க்க வேறொரு நாட்டுக்குச் சுற்றுலா சென்று அங்கேயே நீண்ட நாட்கள் தங்கிவிட்டதாகக் கருதப்படும் ரஷ்ய நாட்டவர் ஒருவர் தன் தந்தையின் கண்களுக்கு முன்னே கோர மரணத்தை சந்தித்தார்.
தேடி வந்த மரணம்
ரஷ்யாவிலிருந்தால் உக்ரைனுடன் போருக்குச் செல்ல நேரிடலாம் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ எகிப்துக்கு தன் தந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார் விளாடிமிர் (Vladimir Popov, 23) என்ற இளைஞர்.
Image: social media / East2west NEWS
ஆனால், Hurghada என்னுமிடத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்த விளாடிமிரை சாவு தேடி வந்திருக்கிறது. ஆம், விளாடிமிரும் அவரது காதலியும் கடலில் நீந்திக்கொண்டிருக்க, அவரது தந்தை கரையிலிருந்தவண்ணம் பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
Image: AFP via Getty Images
அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரைத் தாக்கத் துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் அலறி சத்தமிட, சிலர் கடலில் நீந்திக்கொண்டிருந்தவர்களை எச்சரிக்க, பலர் கரையேறிவிட்டிருக்கிறார்கள், விளாடிமிரின் காதலி உட்பட.
அப்பா அப்பா என அலறிய மகன்
ஆனால், அந்த சுறா விளாடிமிரை விடவில்லை. அவரை அந்த சுறா கடித்துக் குதறுவதை கடற்கரையிலிருந்தவர்கள் பார்த்து அலறி சத்தமிட்டுள்ளார்கள்.
கரையிலிருந்த விளாடிமிரின் தந்தை, தன் மகன் அப்பா, அப்பா என அலறுவதைக் கண்டு துடிதுடிக்க, அவரது கண்களுக்கு முன்னேயே சுறா விளாடிமிரை கபளீகரம் செய்துவிட்டது.
Image: BAZA / East2west News
செய்வதறியாமல் அவர் திகைத்து நிற்க, கரைக்கு வந்த விளாடிமிரின் காதலியோ பைத்தியம் பிடித்ததுபோல அலறிக்கொண்டிருந்ததாக, அந்த துரதிர்ஷ்ட சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகமும் ரஷ்யக் குடிமகன் ஒருவர் சுறா தாக்குதலில் பலியானதை உறுதி செய்துள்ளது.
Image: social media / East2west News