13-வது மாடியிலிருந்து விழுந்து தானே ஆம்புலன்சில் ஏறிய இளம்பெண்!
லேசாக கீழே விழுந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அதுவே 13வது மாடியில் இருந்து விழுந்தால் அடையாளம் கூட கண்டுபிடிக்க முடியதளவிற்கு மரணம் நிச்சயம்.
ஆனால் இங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.
13வது மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக இளம்பெண் கீழே விழுந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் மெதுவாக எழுந்து அமர்ந்து பாரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் பிழைத்தார்.
ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறிது நேரம் கழித்து, ஒரு ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது, இளம் பெண் ஆம்புலன்ஸுக்கு நடந்து சென்று ஏறினார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்பெண் மேலிருந்து கீழே விழும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
? In Novosibirsk, Russia, a 22-year-old girl fell from a 13th floor window and survived.
— Zlatti71 (@Zlatti_71) July 20, 2024
After a landing, the girl was able to roll over on her own and sit on the lawn.
She was later taken to the hospital with a lung contusion, bruises and no fractures.
- FRWL reports pic.twitter.com/jSxUCRKVFQ
விழுந்த அதிர்ச்சியில் நுரையீரலில் லேசான பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு பின் அந்த இளம்பெண் பூரண குணமடைந்துள்ளார்.
அவரது உடலில் வேறு காயங்களோ, எலும்பு முறிவுகளோ இல்லை என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, அந்த இளம் பெண் அடுக்குமாடி குடியிருப்பின் தோட்டத்தில் புல் படுக்கையில் விழுந்தார். விழுந்த சில நிமிடங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது. வயிற்று உப்புசம் பிரச்சனை தோன்றியுள்ளது. உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை.
அவர் கீழே விழுந்தபோது அங்கு யாரும் இல்லை. அதனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக யாருக்கும் தெரியாது. இளம்பெண் எழுந்து ஆம்புலன்சை அழைத்தாள். ஆம்புலன்ஸ் வந்தவுடன் மெதுவாக எழுந்து ஆம்புலன்சை நோக்கி நடந்தாள். இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russian woman falls from 13th floor on soft grass Video