இந்தியரை திருமணம் செய்தது ஏன் தெரியுமா? ரஷ்யப் பெண் கூறும் மூன்று காரணங்கள் (வைரல் வீடியோ)
இந்தியாவில் வசிக்கும் ரஷ்யப் பெண்ணொருவர் இந்தியரை திருமணம் செய்ததற்கான காரணங்களை கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஆன்மீகப் பயிற்சிக்காக வந்த ரஷ்யப் பெண்
Kseniia Chawra என்ற ரஷ்யப் பெண் சில வாரங்களுக்கு முன் ஆன்மீகப் பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளார்.
அவர் இந்திய ஆண் ஒருவர் மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் கணவருடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள Chawra, அதில் ஏன் இந்தியரை திருமணம் செய்தேன் என்று மூன்று காரணங்களை கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், "1.அவர் எப்போதும் எனக்காக சமைக்கிறார், 2.அவர் அழகான குழந்தைகளை உருவாக்குகிறார், 3.அவர் எப்போதும் என்னை கவனித்துக்கொள்கிறார் மற்றும் நேசிக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் "உலகின் சிறந்த கணவர், உன்னை நேசிக்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வைரலான வீடியோ
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதனை 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
சமூக ஊடக பயனர்கள் இந்த ஜோடியை, 'ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் இருப்பதாக' பாராட்டி வருகின்றனர்.
கடந்த மாதம் Kristen Fischer என்ற Content creator, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததில் இருந்து தனது வாழ்க்கை மாறிய 10 வழிகளை பட்டியலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |