உக்ரைன் பெண்களை சீரழிக்குமாறு தன் கணவரிடம் கேட்டுக்கொண்ட ரஷ்யப் பெண்ணுக்கு சிறை
ரஷ்யா 2022ஆம் ஆண்டு உக்ரைனை ஊடுருவியபோது, பல்வேறு அராஜக செயல்கள் அரங்கேறின.
ரஷ்யர்கள், உக்ரைன் மக்கள் மீது தங்கள் வெறுப்பை உமிழ்ந்தனர். அவர்களில் ஒரு பெண், ரஷ்ய ராணுவ வீரரான தன் கணவரிடம், உக்ரைனுக்கு போருக்குச் சென்றுள்ள இடத்தில் உக்ரைன் பெண்களை வன்புணருமாறு கேட்டுக்கொண்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
அந்த ரஷ்யப் பெண்ணுக்கு சிறை
உக்ரைனுக்குப் போரிடச் சென்ற தன் கணவரான ரோமன் பைக்கோவ்ஸ்காயா (Roman Bykovskaya)விடம் தொலைபேசியில் பேசிய ஓல்கா பைக்கோவ்ஸ்காயா (Olga Bykovskaya) என்னும் அந்த ரஷ்யப் பெண், உக்ரைனிலுள்ள பெண்களை வன்புணர தான் தன் கணவருக்கு அனுமதியளிப்பதாக கூறியிருந்தார்.
அந்த தொலைபேசி உரையாடல் உக்ரைன் பாதுகாப்பு சேவை அமைப்பால் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து போர் சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறியதாக ஓல்காவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், சர்வதேச அளவில் தேடப்படுவோர் பட்டியலிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், போர் சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறியதாக ஓல்காவுக்கு தற்போது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகரான கீவ்விலுள்ள Shevchenkivskyi மாவட்ட நீதிமன்றம் ஓல்காவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |