எண்ணெய் நிலையங்களை ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா: புகையால் சூழப்பட்ட கருங்கடல் நகரம்!
உக்ரைனின் ஒடெசா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்குகள் மீது ரஷ்ய ராணுவம் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக அப்பகுதியில் உள்ள உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே முக்கிய கருங்கடல் துறைமுக நகரான ஒடெசா பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனின் ஒடெசா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இக்கட்டான உள்கட்டமைப்புகள் மீது ஞாயிற்றுக்கிழமையான இன்று ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் இந்தப்பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது, மேலும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
???Regional officials say Russian missiles hit ‘critical infrastructure’ facility in #Odesa including #Ukraine's second-biggest fuel storage terminals. pic.twitter.com/YEZpV6wFEX
— Terror Alarm (@terror_alarm) April 3, 2022
இதையடுத்து தொலைக்காட்சிக்கு அப்பகுதி மேயர் அளித்த தகவலில், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், வீடுகள் மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான கட்டடங்களின் மேற்கூரை பலத்த சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய ராணுவம் இந்த பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது ,ஆனால் அடுத்தமுறை ரஷ்ய ராணுவம் நடத்தும் தாக்குதலை உக்ரைன் பாதுகாப்பு படையினர் அறிந்து இருப்பர் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் பொதுமக்கள் மீது நடத்தப்படவில்லை என ரஷ்யா மறுப்புத் தெரிவித்துள்ளது.