எதிரி செயற்கைக்கோள்களை குருடாக்கும் ரஷ்யாவின் லேசர் ஆயுதம்!
எதிரி நாட்டின் செயற்கைக்கோள்களை குருடாக்கும் அளவிலான மேம்பட்ட லேசர் ஆயுதங்களை ரஷ்யா உருவாக்கி வருகிறது.
எதிரி செயற்கைக்கோள்களை ஏமாற்றும் "கலினா" (Kalina) எனும் லேசர் தொழில்நுட்பத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது. வடக்கு காகசஸில் உள்ள ரஷ்ய விண்வெளி கண்காணிப்பு தளத்தில் கலினா என்ற புதிய லேசர் அமைப்பு நிறுவுவபடுவதாக உலகளாவிய ஊடக அறிக்கைகள் மற்றும் விண்வெளி இதழ்களின் வலுவான அறிகுறிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இது ரஷ்ய எல்லையை கடந்து செல்லும் வெளிநாட்டு இமேஜிங் செயற்கைக்கோள்களின் ஆப்டிகல் அமைப்புகளை குறிவைக்கும். 2011-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மீண்டும் மீண்டும் தாமதங்களைக் கண்டது, ஆனால் புதிய Google Earth படங்கள் இப்போது அந்தத் திட்டத்தின் வேலை நன்றாக நடந்து வருவதாக காட்டுகிறது.
கலினா ஒரு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதமாக செயல்படும் என்று பலர் நினைக்கிறார்கள், இதன் விளைவாக வெளிநாட்டு இமேஜிங் செயற்கைக்கோள்களைத் தாக்க முடியும்.
செயற்கைக்கோள்களுக்கு எதிராக கலினா எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவில்லை. ரஷ்யா 2011-ல் ஆயுதத்தை உருவாக்கியது. மேலும் வேலை நடந்து கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் ரஷ்யா இதைப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது.
அதன் தற்போதைய விண்வெளி நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ரஷ்யா இரகசியம் காக்கிறது. எதிர்காலத்தில் கலினாவை ரஷ்ய அரசாங்கம் எதற்காகப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Thespacereview.com மற்றும் bgr.com இன் அறிக்கைகளின்படி, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதமான 'கலினா' ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தால் இயக்கப்படும் குரோனா விண்வெளி கண்காணிப்பு அமைப்பின் ஒரு அங்கமாகும். அந்த வளாகத்தின் இடம் Zelenchukskaya மேற்கில் பல மைல்கள் தொலைவில் உள்ளது. ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்ஸின் வானியற்பியல் ஆய்வகமும் ஆயுதத்திற்கு சற்று அருகிலும் உள்ளது.
ரேடார் (radar) மற்றும் லைடார் (lidar) இரண்டையும் பயன்படுத்தி ரஷ்ய செயற்கைக்கோள்களுக்கு எதிரான செயற்கைக்கோள் அமைப்புகளை இலக்காகக் கொண்ட தகவல்களை வழங்கும் அமைப்பை இயக்க ரஷ்யாவால் இந்த வளாகம் பயன்படுத்தப்படுகிறது.