ரஷ்யாவின் புதிய Plasma Engine: 30 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையக்கூடிய ரொக்கெட் தொழில்நுட்பம்
30 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையக்கூடிய புதிய பிளாஸ்மா எஞ்சினை (Plasma Engine) உருவாக்கியுள்ளது ரஷ்யா.
ரஷ்யாவின் Rosatom நிறுவனத்தின் Troitsk Institute விஞ்ஞானிகள் புதிய பிளாஸ்மா இயந்திரம் விண்வெளி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த Magnetoplasma Propulsion System பாரம்பரிய எரிபொருள் எரிப்பை தவிர்த்து, மின்காந்த புலங்களை பயன்படுத்தி ஹைட்ரஜன் அயனிகளை (Charged Particles) ஒரு நொடிக்கு 100 கி.மீ. வேகத்தில் தள்ளுகிறது. அதாவது மணிக்கு சுமார் 36,000 கி.மீ. வேகம்.
இது சாதாரண ரொக்கெட்களின் (நொடிக்கு 4.5 கி.மீ.) வேகத்தை விட பலமடங்கு அதிகமாகும்.
இவ்வாறு இந்த என்ஜின் தொடர்ந்து முடுக்கம் (Accelerate) கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜினை பயன்படுத்துவதன் மூலம் விண்வெளி பயண நேரம் குறையும் மற்றும் ஆழமான விண்வெளி கதிர்வீச்சில் செலவிட்டு நேரமும் குறையும்.
4 x 14 மீட்டர் அளவுள்ள வெற்றிட அறையில் சோதனை செய்யப்பட இந்த இயந்திரம் 300 கிலோவாட் சக்தியில் இயங்குகிறது. 2400 மணிநேரம் செயல்படும் திறன் கொண்டது, இது செவ்வாய் கிரக (Mars) பயணத்திற்கு போதுமானது.
உலகில் மிக அதிகமாக உள்ள ஹைட்ரஜன், குறைந்த வெப்பத்தில் செயல்படுவதால் இந்த எஞ்சினுக்கு ஏற்ற சிறந்த எரிபொருளாக அமைகிறது.
இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரக பயணத்தை 30 நாட்களில் முடிக்கக்கூடிய புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. SpaceX போன்ற விண்வெளி நிறுவனங்களுக்கு இது பெரும் போட்டியாக வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Plasma Engine, Plasma Rocket to mars, SpaceX vs Russia Plasma Rocket, space travel Engine