அவசர அவசரமாக உக்ரைனுக்கு பறந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்: பதற்றத்தில் போர் வீரர்கள் குழு
உக்ரைனில் ரஷ்ய படைகளால் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளுக்கு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு சுற்றுப்பயணம் செய்து இருப்பதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தற்போது, கிழக்கு உக்ரைனிய பகுதிகளை முழுவதுமாக உக்ரைனிடம் இருந்து பறிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாத உக்ரைனிய வீரர்கள் சீவிரோடோனெட்ஸ்க் நகரை விட்டு பின்வாங்கினர், இதனைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தின் அடுத்தக்கட்ட ஆக்கிரமிப்பு குறியாக லிசிசான்ஸ்க் நகரம் இருப்பதால் அந்த பகுதிகளில் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.
#Russian media reports that Minister of Defence Sergei #Shoigu arrived in the temporarily occupied territories of #Ukraine, where he inspected a grouping of Russian troops. pic.twitter.com/pKK1tUGZo2
— NEXTA (@nexta_tv) June 26, 2022
இந்தநிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, ரஷ்ய படைகளை பார்வையிடுவதற்காக உக்ரைனில் ரஷ்ய படைகளால் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து அடைந்து இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ஸ்கூட்டர் நபர்கள் நடத்திய திடீர் தாக்குதல்; அமெரிக்காவில் சனிக்கிழமை இரவு நடந்த பயங்கரம்!
அத்துடன் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளை ஆய்வு செய்ததாகவும் ரஷ்ய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
Getty Image