அத்துமீறியதா ரஷ்ய போர் விமானங்கள்? பாதுகாப்பு அமைச்சகம் கூறிய விளக்கம்
எஸ்டோனியா வான்வெளியில் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
MiG-31 போர் விமானங்கள்
வெள்ளிக்கிழமை அன்று பின்லாந்து வளைகுடாவில், மூன்று ரஷ்ய MiG-31 போர் விமானங்கள் தங்களது வான்வெளியை அத்துமீறி நுழைந்ததாக எஸ்டோனியா தெரிவித்தது.
போலந்தைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு நேட்டோவுக்கு மேலும் ஆத்திரமூட்டலை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு ரஷ்யாவின் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "MiG விமானங்கள் பின்லாந்தின் எல்லையில் உள்ள Kareliaவில் இருந்து லிதுவேனியா மற்றும் போலந்தால் சூழப்பட்ட அதன் Kaliningrad exclaveயில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்ட விமான பயணத்தில் சென்றன" என தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு அறிக்கையில், "இந்த பயணத்தின்போது, ரஷ்ய விமானம் ஒப்புக் கொள்ளப்பட்ட பாதையில் இருந்து விலகவில்லை மற்றும் எஸ்டோனியா வான்வெளியை மீறவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் விமானம் Vaindloo தீவில் இருந்து மூன்று கிலோ மீற்றருக்கும் அதிகமான பால்டிக் கடலின் நடுநிலை நீர்நிலைகளில் பறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |