மொத்தமாக 2,000 பேர்... இனப்படுகொலை தொடர்பில் தேடப்பட்டுவந்த முக்கிய நபர் கைது: வெளிவரும் பின்னணி
ருவாண்டா இனப்படுகொலை தொடர்பில் 22 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
2,000 க்கும் மேற்பட்ட மக்களை
ருவாண்டா இனப்படுகொலையில் மிகத் தீவிரமாக தேடப்பட்டு வந்த நபர்களில் ஒருவர் கைதான இந்த நபர் என்றே கூறுகின்றனர். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தேவாலயத்தில் 2,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு பொலிஸ் அதிகாரி இந்த Fulgence Kayishema.
@cnn
தென்னாப்பிரிக்காவில், கேப் டவுனுக்கு கிழக்கே 30 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Paarl என்ற நகரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தவரை புதன்கிழமை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 60 வயதை நெருங்கும் Fulgence Kayishema போலியான பெயரில் அந்த நகர மக்களிடம் பழகி வந்ததாகவே கூறப்படுகிறது. 2001ல் அவர் குற்றஞ்சாட்டப்பட்டதிலிருந்து பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் ரகசிய விசாரணையை முன்னெடுத்து வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, கயிஷேமாவை கைது செய்வது குறித்து தகவல் தருபவர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு வழங்குவதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது. 1994ல் மூன்று மாத காலப்பகுதியில் நடந்த ருவாண்டா இனப்படுகொலையில் 800,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த
Hutu இனக்குழு உறுப்பினர்கள் சிறுபான்மை டுட்சிகள் மீது திரும்பி, அவர்களை படுகொலை செய்தனர். இருப்பினும் மிதவாத ஹூட்டுக்கள் அவர்களை பாதுகாக்க முயன்றனர்.
இந்த நிலையில் 1994ல் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 2,000 டுட்சி அகதிகள் தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த நிலையில், அவர்களை கொல்ல பொலிஸ் அதிகாரியான கயிஷேமா திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
@cnn
முதலில் தேவாலயத்தில் சிக்கியிருந்த மக்களை உயிருடன் எரிக்க பெட்ரோல் வாங்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த திட்டம் தோல்வியடையவே கயிஷேமாவும் மற்றவர்களும் புல்டோசரைப் பயன்படுத்தி தேவாலயத்தை இடித்து, புதைத்து, அகதிகளைக் கொன்றனர்.
இதனையடுத்து, கயிஷேமாவும் மற்றவர்களும் இரண்டு நாட்களில் உடல்களை தேவாலய மைதானத்தில் இருந்து புதைகுழிகளுக்கு மாற்றினர் என்றே குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கயிஷேமா ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு வெள்ளிக்கிழமை கேப்டவுனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தென்னாப்பிரிக்க பொலிசார் தெரிவித்துள்ளனர்.