ரஷ்யாவிற்கான பிரத்யேக முதலீட்டு உச்சி மாநாட்டை நடத்த சவுதி அரேபியா திட்டம்
ரஷ்யாவிற்கான முதலீட்டு உச்சி மாநாட்டை நடத்த சவுதி அரேபியா திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கான முதலீட்டு உச்சி மாநாடு
ரஷ்யாவிற்கான தனித்துவமான முதலீட்டு உச்சி மாநாட்டை நடத்த சவுதி அரேபியாவின் எரிசக்தி மற்றும் முதலீட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த செய்தி, புதன்கிழமை சவுதி அரேபியாவின் செம்பாஃபர் ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான முதலீட்டு மாநாட்டை சமீபத்தில் சவுதி அரேபியா நடத்தி இருந்த நிலையில் சிறிது கால இடைவெளியிலேயே ரஷ்யாவிற்கான முதலீட்டு மாநாட்டை நடத்த சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த மாநாட்டில் ரஷ்ய தலைவர் கலந்து கொள்வாரா? யாரெல்லாம் சிறப்பு பேச்சாளர்கள் என்பது போன்ற விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதே சமயம் இந்த உச்சி மாநாட்டில் முக்கியமாக தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, கட்டுமானம், சுரங்கம் ஆகிய துறைகள் கவனம் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சமீபத்திய அமெரிக்க பயணத்தை தொடர்ந்து இந்த செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |