பிறந்த குழந்தைகளை கொன்று பல ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பெண்
கருவை கலைத்துவிட்டதாக கூறிவிட்டு, குழந்தைகளை பிரசவித்து உடனே கொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த கொடூரமான தாய் குறித்த அதிர்ச்சியூட்டும் செய்தி இது.
குழந்தைகளை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. சில பெண்கள் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பிறப்பதை தாமதப்படுத்துகிறார்கள். மற்றவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை இல்லாத தம்பதியரின் துயரம் விவரிக்க முடியாதது.
ஏற்கனவே மூன்று குழந்தைகள்
இந்நிலையில், தென்கொரியாவில் தனக்கு பிறக்கும் குழந்தைகளையே கொடூரமாக கொன்ற தாய் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
JTBC
தென்கொரியாவின் தலைநகர் Seoul-ல் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Suwon நகரைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 12, 10 மற்றும் 8 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அதன்பிறகு, அப்பெண்ணுக்கு 2018 மற்றும் 2019-ல் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.
குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு குழந்தைகளின் சடலம்
மருத்துவமனையில் இருந்த குழந்தைகளின் பெயர்களை பிறப்பு பதிவுகளில் பதிவு செய்யாதது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். முதலில் அந்த பெண் பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
இறுதியாக, குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் பொலிஸார் கண்டெடுத்தனர். இதன் மூலம் குழந்தையை கொன்றதை அந்த பெண் ஒப்புக்கொண்டார்.
Korea Times
பிறந்த மறுநாளே கழுத்தை நெரித்து..,
2018-ல், அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தையை பிறந்த மறுநாளே கழுத்தை நெரித்துக் கொன்று யாருக்கும் தெரியாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
இதையடுத்து, 2019-ல் மற்றொரு குழந்தை பிறந்தபோது, இந்தக் குழந்தையையும் கொண்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
கணவன் அதிர்ச்சி
பணப்பிரச்சினையால் குழந்தைகளை வளர்க்க வழியில்லாமல் தான் இவ்வாறு செய்ய நேர்ந்ததாக அந்த பெண் கூறுகிறார். அந்த பெண்ணின் பேச்சை கேட்டு பொலிஸார் மட்டுமின்றி அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இரண்டு முறையும் கருக்கலைப்பு செய்து கொண்டதாக மனைவி கூறியதாக அவர் கூறினார். இறுதியாக அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
Newborn, South Korea, Mom Killed Newborns, Freezer
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |